search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கால்பந்து போட்டி"

    • கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளிக்க செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள், புதிய ‘டீ-சர்ட்’ கேட்டு திருப்பூருக்கு படையெடுக்கின்றனர்.
    • கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், திருப்பூரில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஐ.பி.எல். உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரசிகர்கள் அணியக்கூடிய வகையில் ஒவ்வொரு அணியின் லோகோவுடன் டீ-சர்ட் பனியன் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடு அணிகளில் விளையாட கூடிய வீரர்களின் ரசிகர்களான கேரள வீரர், வீராங்கனைகள் திருப்பூர் வந்து 'ஜெர்சி' விளையாட்டு ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளிக்க செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள், புதிய 'டீ-சர்ட்' கேட்டு திருப்பூருக்கு படையெடுக்கின்றனர்.

    குறிப்பாக, கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், திருப்பூரில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    கேரள மாநிலத்தில் கால்பந்து வீரர், வீராங்கனைகள், விளையாட்டு குழுக்கள் அதிகம் உள்ளன. அவர்கள் பல்வேறு நாட்டு கால்பந்து அணிகளின் தீவிர ரசிகர்களாகவும் உள்ளனர். இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பார்வையாளராக செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 'ஜெர்சி' ஆடைகள் வாங்க திருப்பூர் வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் பனியன்களை தயாரித்து கொடுக்கின்றனர்.

    உலக கோப்பை கால்பந்து போட்டிகளின்போது ரஷியாவின் முக்கிய இணையதளங்களை குறிவைத்து 2.5 கோடி சைபர் தாக்குதல்கள் நடந்ததாக புதின் குறிப்பிட்டுள்ளார். #Russiatargeted #25millioncyberattacks #WorldCup #Putin
    மாஸ்கோ:

    அமெரிக்காவுக்கு நிகரான வல்லரசு நாடாக ஒருகாலத்தில் கருதப்பட்ட சோவியத் யூனியன் உடைந்த பின்னர் தனிநாடுகளாக சோவியத் யூனியன் அமைப்பு சிதறிப்போனது. குறிப்பாக, செர்னோபில் அணுஉலை விபத்துக்கு பின்னரும், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளாலும் ரஷியா நிதிசார்ந்த விவகாரங்களில் சிறிது தள்ளாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

    இடையில், உக்ரைன் நாட்டை உடைத்து கிரிமியா என்னும் தனிநாடு உருவாக்கியது மற்றும் சிரியா விவகாரத்தில் அதிபருக்கு ஆதரவாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதுபோன்ற நடவடிக்கைகளால் ஐரோப்பிய நாடுகளின் தாக்குதலுக்கு ரஷியா உள்ளானது.

    இதற்கிடையில், ‘பிபா’ என்னும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷியா வெற்றிகரமாக நடத்தி காட்டியது. இன்று குரோஷியா - பிரான்ஸ் மோதும் இறுதிப்போட்டி நேற்று மாஸ்கோ நகரில் நடந்து முடிந்தது.



    இந்நிலையில், ரஷியா உள்நாட்டு பாதுகாப்பு உயரதிகாரிகள் கூட்டத்தில் நேற்று பேசிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக கோப்பை கால்பந்து போட்டிகளுடன் தொடர்புடைய ரஷியாவின் சுமார் இரண்டரை கோடி இணையதளங்கள் ‘சைபர்’ தாக்குதல்களுக்கு இலக்கானதாகவும், அந்த தாக்குதல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

    இந்த தகவலை அதிபரின் கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்டுள்ளது. #Russiatargeted #25millioncyberattacks #WorldCup #Putin
    உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மாலை தொடங்க உள்ள நிலையில் அதனை கூகுள் டூடுலாக கொண்டாடி வருகிறது. #GoogleDoodle #FIFA2018
    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

    இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.


    அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #GoogleDoodle #FIFA2018


    ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறார்கள்.#FIFO2018

    உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை நேரில் காண்பதில் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆவல் இருக்கிறதோ?, அதுபோல் உலக கோப்பை போட்டியின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று முன்கூட்டியே வெளியாகும் கணிப்புகளை அறிவதிலும் அதிக ஆர்வம் இருப்பது உண்டு. இந்த ஆர்வத்துக்கு தீனி போடும் வகையில் 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பை தொடரின் போது முடிவுகளை கணிப்பதில் ‘பால்’ என்ற ஆக்டோபஸ் கடல் வாழ் உயிரினம் கதாநாயகனாக விளங்கியது. ஜெர்மனியில் உள்ள கடல் வாழ் அருங்காட்சியத்தில் இருந்த அந்த ஆக்டோபஸ் போட்டியின் முடிவுகளை ஆட்டத்துக்கு முன்கூட்டியே துல்லியமாக கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு சிறிய ஜாடியில் உணவுகளை போட்டு அவற்றின் மீது அன்றைய போட்டியில் மோதும் அணிகளின் கொடி வைக்கப்பட்டு இருக்கும். நீந்தி வரும் ஆக்டோபஸ் எந்த ஜாடியில் உள்ள உணவை உட்கொள்கிறதோ?, அதன் மீதுள்ள கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்படும். அதுபோல் ஜெர்மனி அணி மோதிய அனைத்து ஆட்டங்களையும் துல்லியமாக கணித்த ஆக்டோபஸ், ஸ்பெயின் அணி கோப்பையை வெல்லும் என்று அது சுட்டிக்காட்டிய ஆருடமும் அப்படியே பலித்தது.

    இந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியா, ஆட்டத்தின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை கணிக்க ‘அசிலிஷ்’ என்ற பூனையை தயார்படுத்தி வைத்து இருக்கிறது.



    செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் உள்ள இந்த பூனைக்கு அனா கசட்கினா என்பவர் பயிற்சி அளித்து வருகிறார். இரண்டு கிண்ணத்தில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டு, அதில் போட்டியில் மோதும் அணிகளின் கொடி இடம் பெற்று இருக்கும். ‘அசிலிஷ்’ பூனை எந்த கிண்ணத்தில் உள்ள உணவை உட்கொள்கிறதோ? அந்த கிண்ணத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கொடிக்குரிய அணி வெற்றி பெறும் என்று கருதப்படும். அகிலிஷ் பூனையின் கணிப்பு எப்படி இருக்க போகிறது என்று போட்டி போகப் போக தான் தெரியும் எனலாம். #FIFO2018
    உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இ பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள் பற்றி ஒரு பார்வை. #FIFA2018
    பிரேசில் (தரவரிசை- 2)

    கால்பந்து விளையாட்டுக்கு பெயர் போனது பிரேசில். தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள அந்நாட்டு மக்கள் இந்த விளையாட்டை மிகவும் ரசிக்க கூடியவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு கால்பந்து அணியும் திகழ்கிறது. உலக கோப்பையை பிரேசில் அணி 5 முறை வென்று உலக சாதனை படைத்து இருக்கிறது. மேலும் அனைத்து உலக கோப்பை போட்டியிலும் விளையாடிய ஒரே அணி ஆகும்.

    பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ, ஜிகோ, கேரின்சா, ரொமாரியோ போன்ற உலகின் தலைசிறந்த வீரர்களை உருவாக்கியது. பிரேசில் அணி 1958, 1962, 1970, 1994, 2002 ஆகிய ஆண்டுகளில் உலக கோப்பையை வென்றது. 5 முறை உலக கோப்பையை வேறு எந்த அணியும் வென்றது கிடையாது. மேலும் பிரேசில் அணி இரண்டு தடவை 2-வது இடத்தையும் (1950, 1998), 3-வது இடத்தையும் (1938, 1978), 4-வது இடத்தையும் (1974, 2014) பிடித்தன. அந்த அளவுக்கு கால்பந்தில் அந்த அணி வலிமையாக உள்ளது. கடந்த முறை சொந்த மண்ணில் நடந்த போட்டியில் பிரேசில் அணி அரை இறுதியில் 1-7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தால் விலகியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

    தற்போதுள்ள பிரேசில் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் 6-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. நெய்மர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். அவரது உத்வேகமான ஆட்டம் பிரேசில் அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் சர்வதேச போட்டியில் 54 கோல்கள் அடித்து உள்ளார். பிலிப் கோடினோ, ராபர்ட்டோ பிர்மினோ, பிரட், டியோகோ சில்வா போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    உலக கோப்பை போட்டிக்கு முதல் அணியாக நுழைந்த பிரேசில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டாரிகா போன்ற நாடுகள் அந்த பிரிவில் உள்ளன. இதில் சுவிட்சர்லாந்து சவாலான அணி. இந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் நம்பிக்கையுடன் பிரேசில் அணி இருக்கிறது.

    உலக கோப்பையில் 104 ஆட்டத்தில் விளையாடி 70-ல் வெற்றி பெற்றது. 17 ஆட்டத்தில் தோற்றது. மீதியுள்ள 17 போட்டியில் டிரா ஆனது. 221 கோல்கள் அடித்துள்ளன. 102 கோல்கள் வாங்கியுள்ளன.

    சுவிட்சர்லாந்து (தரவரிசை-6 )

    ஐரோப்பா கண்டத்தில் உள்ள சுவிட்சர்லாந்து உலக கோப்பை போட்டியில் 10 முறை விளையாடி உள்ளது. இதில் 3 தடவைகால் இறுதி வரை நுழைந்து உள்ளதே அந்த அணியின் சிறப்பான நிலையாகும். கடைசியாக 1954-ம் ஆண்டு அந்த அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. அதற்கு பின்னர் சுவிட்சர்லாந்து தான் விளையாடிய 7 போட்டியில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த முறை 2-வது சுற்றோடு வெளியேறியது. தற்போது அந்த அணி தர வரிசையில் ‘டாப் 10’ இடத்தில் உள்ளது. மேலும் அந்த அணி மிகவும் சிறப்பாக விளையாடுவதால் 64 ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இ’ பிரிவில் முதலிடத்தை பிடிக்க கூடிய திறமையுடன் சுவிட்சர்லாந்து உள்ளது. பிரேசில் அணிக்கு கடும் சவாலாக இருக்கும். பெக்ராமி, ஷொர்டான், ஷேபரோவிக் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். உலக கோப்பை போட்டியை நடத்திய அணிகளில் அந்நாடு ஒன்றாகும். அங்கு 1954-ல் போட்டி நடந்தது.

    சிறந்த நிலை: கால் இறுதி (1934, 1938, 1954)

    கோஸ்டாரிகா (தரவரிசை- 23)

    5-வது முறையாக உலக கோப்பையில் கோஸ்டாரிகா பங்கேற்கிறது. இதற்கு முன்பு (1990, 2002, 2006, 2014) போட்டியில் ஆடி இருந்தது.

    கடந்த உலக கோப்பையில் அந்த அணி கால் இறுதி வரை நுழைந்து இருந்தது. நெதர்லாந்திடம் பெனால்டி ஷூட்டில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அந்த அணியில் பிரையன் ரூயிஸ், கிறிஸ்டியன் போலேன்ஸ், மார்கோ யூரினா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

    பிரேசில், சுவிட்சர்லாந்து போன்ற சிறந்த அணிகள் அந்த பிரிவில் இருப்பதால் கோஸ்டாரிகா ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினமானதே.

    சிறந்த நிலை: கால்இறுதி (2014)


    செர்பியா (தரவரிசை- 34)

    8 ஆண்டுகளுக்கு பிறகு செர்பியா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. செர்பியா தனி நாடாக சுதந்திரம் பெற்ற பிறகு 2-வது முறையாக பங்கேற்கிறது. ஒருங்கிணைந்த யூகோசுலேவியாக இருந்தபோது 2 முறை 4-வது இடத்தை (1930, 1962) பிடித்து இருந்தது.

    ஆஸ்திரியா, வேல்ஸ் அணிகளை வீழ்த்தி உலக போட்டிக்குள் நுழைந்தது. தகுதி சுற்றில் 20-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து இருந்தது. அலெக்சாண்டர் மிட்ரோவிக் 6 கோல்கள் அடித்து இருந்தார். இவானோவிக், நெமன்ஜா மோட்டிக் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். #FIFA2018
    ×